திண்டுக்கல்: பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் பழனி மலைக்கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோயில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் கருவறை மற்றும் மூலவர் செய்த பின், குழுவின் வழிகாட்டுதல் படி பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனி மலைக்கோயில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையை சிலை பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஓய்வுபெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையில் பேரூர், சிறவை ஆதீனங்கள்; ஸ்தபதிகள், சித்த மருத்துவர்கள், அர்ச்சகர்கள், இணை ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டு தொடர்ந்து அதிகாலை வரை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதையும் படிங்க:தெய்வ பக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது - உயர்நீதிமன்றம்