திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மத்திய அரசு மெதுவாக விஷத்தை பரப்பிவருகிறது. அதை தமிழ்நாடு அரசும் ஆதரித்து வருவதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. அஞ்சல்துறையைத் தொடர்ந்து ரயில்வே துறையிலும் மத்திய அரசு இந்தியைத் திணித்தது வருகிறது" என்று விமர்சித்தார்.
கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றவே அமைச்சர்கள் இப்போது சென்றுள்ளனர் - அதியமான் - TN minister jolly trip
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு சுற்றிவருவதாக ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் விமர்சித்துள்ளார்.
Adhiyamaan
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சுற்றுலா சென்றுள்ளனர். ஏதோ கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றிக்கொள்ளலாம் என்ற ஒரே எண்ணத்தோடு சுற்றி வருகின்றனர்" என்று காட்டமாக விமர்சித்தார்.