திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆருக்கு, நாம்தான் வாரிசுகள். கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்தபோது வாங்காத மனுக்கள், இப்போது வாங்கி என்ன பயன் ஸ்டாலினுக்கு.
தற்போது திமுக நிலைமை பரிதாபமாக உள்ளது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளிக்கு இந்தத் தேர்தல்தான் வாய்ப்பு மக்களுக்கு. 2015 வாங்கிய மனுக்கு என்னாச்சு திமுகவிடம் மக்கள் கேட்கிறார்கள்.
நத்தத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனுமதி பெற்று நத்தம் பகுதியில் மலை கிராமங்களுக்கு, தார்ச்சாலை அமைக்கப்படும்.
நொச்சி ஓடைப்பட்டியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும். நத்தம் நகரில் மின் மயானம் அமைக்கப்படும். நத்தம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றப்படும்” எனப் பேசினார்.