ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியின் இறப்பில் சந்தேகம் - நீதிவேண்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - dindigul girl death

வேடசந்தூர் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் எரியோடு பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dindigul girl death
dindigul girl death
author img

By

Published : Jul 8, 2020, 1:14 PM IST

திண்டுக்கல்: சிறுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் தலைமை வகித்த மாநில குழு உறுப்பினர் பாலபாரதி, வேடசந்தூர் அருகேயுள்ள தொட்டணம்பட்டி கட்டட தொழிலாளியின் 12 வயது மகள் ஜூன் 27ஆம் தேதியன்று இறந்தார். அச்சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதாகவும் மார்பு பகுதியில் காயங்கள் உள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.

காவல்துறையினர் முழுமையாக விசாரணை செய்யும் முன்பாக பெண்ணின் உடலை எரித்ததாகவும், இதனால் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

இதுகுறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details