திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பகலவன் ராஜா. யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த துணை நடிகை திவ்யா பாரதி தன்னை ஏமாற்றி ரூபாய் 30 லட்சம், பத்து சவரன் நகை மோசடி செய்து விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைக்காக திவ்ய பாரதியை அழைத்தனர். விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த, திவ்யபாரதி யூடியூப் சேனல் நடத்தும் பகலவன் ராஜா தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பொய் புகார் அளித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததார்.
தனது புகாரில் பகலவன் ராஜா கவிதைகளுக்கு விளம்பர மாடலாக நடித்துக் கொடுத்ததற்கு மட்டுமே பணம் வாங்கினேன். எந்தவித ஆசை வார்த்தைகளும் நான் கூறவில்லை. மேலும் தனக்கு இயக்குநர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததாகவும், தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் திவ்ய பாரதி விசாரணையில் பகலவன் ராஜா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.