திண்டுக்கல்:விருதுநகர் குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவராஜ்(45). இவர் திண்டுக்கல் மாவட்டம், பழனி 14ஆவது பட்டாலியனில் உதவி ஆய்வாளராக இருந்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் உள்ள சொந்த வீட்டில் இருந்து பழனிக்கு இவர் பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
ஜீவராஜ் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி நத்தம் வத்திபட்டியில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.