திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன்கீழ் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் 12 மகளிர் கலைக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் இருந்து வாலிபால் போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவிகள் பல்கலைக்கழகம் அணியில் இடம்பெறுவர். சென்னையில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டிக்கு அழைத்துச் செல்லாமல், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நிர்வாகிகள் அலைக்கழிப்பு செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பழநி கல்லூரி மாணவிகள், ' சென்னையில் தென்னிந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த போட்டிகளுக்கு எல்லாம் பல்கலைக்கழக அணியை அழைத்துச் சென்றார்கள்.