தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணிசெய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை - மேற்பார்வையாளர் மீது குற்றச்சாட்டு

பழனி நகராட்சியில் தூய்மைப் பணி செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மேற்பார்வையாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தூய்மைப் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை
தூய்மைப் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை

By

Published : Apr 20, 2022, 10:45 PM IST

திண்டுக்கல்: பழநி நகராட்சியில் தூய்மைப் பிரிவில் டெங்கு ஒழிப்புப்பணியாளராக பணியாற்றி வருபவர், யசோதா. இவர் பழநி நகராட்சியில் தூய்மைத்துறையின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் மாரிமுத்து என்பவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பழனி நகராட்சி தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பணிபுரியும் மாரிமுத்து என்பவர் பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார். தூய்மைப் பணியாற்றும் பெண்களை தனியார் விடுதிக்கு அழைக்கிறார்.

அங்குவைத்து கை, கால்கள் அமுக்கி விடச்சொல்கிறார். மேலும், பெண்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சாதியைச் சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் திட்டுகிறார். தொடர்ந்து பணி செய்வதில் இடையூறு செய்து வருகிறார்” என்றார்.

தூய்மைப் பணி செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை

இது குறித்து தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மாரிமுத்து கூறுகையில், “அந்தப் பெண் சரியாக பணி புரியாததால் பணி நீக்கம் செய்தோம். அதனால் கோபமடைந்த அப்பெண் என் மீது அபாண்டமாக பலி கூறி வருகிறார். என்னைப் பற்றி தூய்மைப் பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்கிறார்.

இதையும் படிங்க:காதலை பிரித்த கோபம்.. 15 வயது மாணவிக்கு இளம்பெண் செய்த கொடுமை...

ABOUT THE AUTHOR

...view details