திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளை, அவர்களின் எதிர் வீட்டிலிருந்த கிருபானந்தம் (19) என்ற இளைஞன், அவனது நண்பர்கள் டார்வின் சிங், ஜெயப்ரகாஷ் ஆகியோர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் மூக்கில் மின் கம்பியை திணித்து கொலை செய்தனர்.
இக்கொலை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர் விசாரணை நடத்தி கிருபானந்தத்தை மட்டும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஓராண்டாக நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
அதில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபானந்தத்தின் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தீர்ப்பைக் கேட்டவுடன் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்: