தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி - to get job at abroad

திண்டுக்கல்லைச் சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ன

By

Published : Aug 8, 2021, 10:36 PM IST

திண்டுக்கல்: பள்ளப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் முகநூலில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா(35) என்பவருடன் பேசி பழகியுள்ளார். இந்நிலையில் அவர் வெங்கடாஜலத்திற்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார்.

இது குறித்து வெங்கடாஜலம் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன், ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ், சார்பு ஆய்வாளர் ரைஹானா கொண்ட தனிப்படையினர் மோசடி நபரை தேடி வந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்

கைது

இந்தநிலையில் இன்று(ஆக.8) ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனாவை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆண்களே உஷார்: முகநூலில் பெண் போல் பேசி பணம் பறிக்கும் மோசடி கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details