திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு அட்டுவம்பட்டி , வில்பட்டி, பள்ளங்கி பிரதான சாலையில் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அலுவலர்கள், நீண்டநேரம் போராட்டத்திற்குப் பிறகே ராட்சத மரத்தை அகற்றினர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.