தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Palani kumbabishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளணுமா? இதைப்படிங்க

Palani kumbabishekam: பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வரும் ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, அதில் பங்கெடுக்க விரும்பும் பக்தர்கள் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்வதற்கான விவரங்களை, பழனி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 14, 2023, 1:49 PM IST

Palani kumbabishekamதிண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கும்பாபிஷேகப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கோயிலில் கோபுரங்கள் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் நடைபெற்று வந்த வண்ணம் இருந்தன.

கிட்டத்தட்ட பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9:30 மணிக்குள் நடைபெறும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம் வரும் 18.01.2023 முதல் 20.01.2023 வரை கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முன்பதிவு செய்ய,

1. நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (PAN CARD)

2. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

3. பாஸ்போர்ட் (Passport)

4. நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு (Bank Pass Book)

5. ஓட்டுநர் உரிமம் (Driving License)

6. குடும்ப அட்டை(Ration Card)

7. தேசிய அடையாள அட்டை (Aadhaar Card) சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து, தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது, பழனி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் - தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details