திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதியில் விடப்பட்ட சாலைப்பணிகள் - விரைந்து முடிக்க வலியுறுத்தல் - கொடைக்கானல் சுற்றுலா
திண்டுக்கல்: கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலா இடங்களுக்கு செல்லக் கூடிய முக்கிய சாலையான பாம்பார்புரம் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை கடந்த வாரம் அவசரமாக புதியசாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ஆனால் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டதாகவும், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பாதியில் விடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.