தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குதிரை வண்டி ஓட்டுநர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் வழங்கல் - Relief materials were provided to the horse riders

திண்டுக்கல்: இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கொடைக்கானல் குதிரை ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

குதிரை ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்கள்
குதிரை ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

By

Published : Oct 20, 2020, 4:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக கரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை, கட்டுப்பாடுகள் இருந்ததால் இங்குள்ளவர்கள் வருமானமின்றி தவித்துவந்தனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்யத் தடை நீடித்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகக் குதிரை ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கொடைக்கானல் கிளை சார்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் குதிரை ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு நிதியுதவி அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details