தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி... - Darna protest

கொடைக்கானலில் மர்மமான முறையில் உயிரிழந்த தென்காசி வாலிபரின் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி

By

Published : Dec 3, 2022, 7:29 AM IST

திண்டுக்கல்: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அய்யாதுரையின் மகன் சூர்யா(30), வீடியோ எடிட்டிங் படித்துள்ளார். இவர் சென்னையில் 2021ம் ஆண்டு தங்கி பணிபுரிந்த காலகட்டத்தில் கர்லின் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அது காதலாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த சூர்யா கொடைக்கானல் லாய்ஸ்ரோடு பகுதியில் உள்ள மனோலிகுடி என்ற தனியாருக்கு சொந்தமான காட்டேஜ் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி

இதைத் தொடர்ந்து நேற்று (01.12.2022) கர்லின் சுவேத்தா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து சூர்யா கீழே விழுந்து விட்டதாக கூறி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், பின்னர் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கொடைக்கானல் போலீசார் சூர்யா மரணம் 174 சந்தேக வழக்காக பதிவு செய்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யா இறப்பில் மர்மம் உள்ளது என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் அவரை அவரது முன்னாள் காதலி கர்லின் ஸ்வேத்தா தனது ஆண் நண்பர்கள் கௌதம், அகில், சோழா மற்றும் சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சூர்யாவின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பைக்கில் அதிவேகமாக சென்ற மாணவர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details