இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அன்றாட உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடைக்கானல் கிளைத் தலைவர் சூரியன் ஆபிரகாம் ஒருங்கிணைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நோயாளிகள் பயன்படுத்தத் தேவையான மெத்தை, தலையணை, கம்பளி உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சூரியன் ஆபிரகாம் இணைந்து வழங்கினர்.