தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குதிரையில் எடுத்துச்செல்லப்பட்ட ரேஷன் பொருட்கள் - மாவட்ட ஆட்சியர் அதிரடி - Dindigul District News

திணடுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லி.மலையூர் பகுதிக்கு குதிரையில் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி
குதிரையில் எடுத்துச்செல்லப்பட்ட ரேஷன் பொருட்கள் , மாவட்ட ஆட்சியர் அதிரடி

By

Published : Nov 3, 2021, 11:07 AM IST

திண்டுக்கல்:லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமமான மலையூர், 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பள்ளிக்குச் செல்லவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ லி.மலையூர் மக்கள், மலையில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும்.

மலைக்கிராமம்
ரேஷன் பொருட்களை பெற, மலைப்பகுதியில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதற்காக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நாட்களில் தனியாக வாகனங்களை வாடகைக்கு எடுத்து, லிங்கவாடி ரேஷன் கடைக்கு சென்று பொருள்கள் வாங்க வேண்டும். பின்னர் மலை அடிவாரத்திலிருந்து தலைச்சுமையாக வீடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நீண்டநாள் கோரிக்கை

எனவே தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் புதிதாக பதவி ஏற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், மலையூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குதிரையில் எடுத்துச்செல்லப்பட்ட

குதிரையில் ரேஷன் பொருட்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின்படி மலையூர் கிராமத்திற்கு இந்த மாதத்தில் வழங்குவதற்குத் தேவையான ரேஷன் பொருட்களை வட்ட வழங்கல் அலுவலர்கள் குதிரை உதவியுடன் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை மலைக்கு கொண்டு சென்றனர். இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த மலை கிராம மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: தலை தீபாவளி உபசரிப்பு - சுடச்சுடத் தயாராகும் பலகாரங்கள்

ABOUT THE AUTHOR

...view details