கோடைகாலம் தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் இல்லாததால் மக்கள் பெரும் அவதியடைந்துவருகின்றனர்.
மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை! - கொடைக்கானல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் நேற்று சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.
kodai
இந்நிலையில் கொடைக்கானல் பியர் சோலா பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையின்போது மழை இல்லாமல் மக்கள் பெரும் அவதியடைந்து வருவதாகவும், தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் உள்ளிட்டவை இறந்து விடுகின்றனர்.
எனவே இதிலிருந்த மக்களும் விலங்குகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டி இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்புத் தொழுகையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.