தென்கிழக்கு அரபிக்கடலில் டவ்-தே புயல் உருவானது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்தது. அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் அலர்ட் கொடுக்கப்பட்டதால், மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கொடைக்கானலில் மழையால் வீடுகள் சேதம் - நிவாரணம் கோரும் மக்கள்! - கனமழை செய்திகள்
கொடைக்கானல் அருகே தொடர்ந்து பெய்து வந்த மழையால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமாயின.
வீடுகள் சேதம்
இந்நிலையில், நேற்று (மே.15) இரவு முதல் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ததால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பின் தகரம் சேதமடைந்தது. இதனால் குடியிருப்பில் இருந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதால், அரசு இதற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் டாக்டே புயல்!
Last Updated : May 16, 2021, 12:24 PM IST