திண்டுக்கல், நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளன. இதனால் சாலைகளில் தூசி நிறைந்து காணப்படுவதால், கனரக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் காற்று மாசு அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து ஆர்.எம்.டி.சி பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று நத்தம் சாலையின் நடுவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.