இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலக நாடுகளே உலுக்கும் துயரச் சம்பவமாக மாறியுள்ளது. இதற்கு பல உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, இலங்கைக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோர்க்கு மெழுகுவர்த்தி அஞ்சலி! - Candle tribute
திண்டுக்கல்: இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, திண்டுக்கல் மாவட்ட அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Srilankan blast
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் எழுத்தாளர்கள், மருத்துவர்கள், நீதிபதி, வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.