புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மற்றொரு பிரிவினர் தரக்குறைவாக பேசிய காணொளி சமூக வலை தளங்கள் மூலம் வேகமாக பரவியது. இதையொட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தவறான முறையில் வீடியோ பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நத்தத்தில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு - போராட்டம்
திண்டுகல்: சர்ச்சைக் காணொளி விவகாரம் தொடர்பாக நத்தம் அருகே 100க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
protest
இந்த போரட்டம் குறித்து தகவலறிந்த நத்தம் பகுதி காவல் ஆய்வாளர் சேகர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.