கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மக்கள் வெளியில் சுற்றிவருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொதுமக்களை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கொடைக்கானலில் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் மூஞ்சிக்கல் பகுதியில் காவலர்கள் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி வெளியில் சுற்றக்கூடாது என அறிவுரை வழங்கினர்.