திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம் அருகேயுள்ள மன்னவனூர் பகுதியிலிருந்து கூக்கால் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சாமி கும்பிடுவதற்கு 19 நபர்கள், குடும்பமாக பிக்கப் வாகனத்தில் சென்றுள்ளனர்.
கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, மன்னவனூர் கிராமத்துக்கு அருகில் தண்ணீர்பாறை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணம்செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியினர் உடனடியாக அனைவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.