திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளியில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தமிழகம் முழுவதும் சிறப்பான வெற்றியைப் பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்.
அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்பதே மக்களின் எண்ணம் - ஐ.பெரியசாமி - அதிமுக அரசு
திண்டுக்கல்: அதிமுக ஆட்சியை அகற்றும் நோக்குடன் வாக்காளர்கள் தங்கள் கடமையாற்றியுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
periyasamy
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராவிட்டாலும் அதையும் பொருட்படுத்தாமல் அதிமுக அரசை அகற்ற வேண்டும், ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த இயந்திரத்தில் கோளாறு!