தமிநாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக மார்ச் 31ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது . இதில் முக்கிய அம்சமாக மாவட்ட எல்லைகள் மூடப்படுவதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு நேற்று காலை முதல் அதிக அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் திருச்சி, பழனி, மதுரை ஆகிய ஊர்களுக்கு மக்கள் செல்ல போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் 300க்கும் மேற்பட்டோர் திடீரென பேருந்து நிலையத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர் . தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் செல்வதற்கு பேருந்துகளை ஏற்பாடு செய்து அனைவரையும் பேருந்துகளில் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.