தமிழ்நாடு

tamil nadu

நத்தம் கல்குவாரியை மூடக்கோரி  கறுப்பு தீபாவளி அனுசரிப்பு!

By

Published : Oct 28, 2019, 7:27 AM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீபாவளியைப் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

peoples demanding

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் கற்கள், தூசுகள் சிதறி குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து பலமுறை நத்தம் வட்டாசிரியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் தீபாவளியைப் புறக்கணித்து தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குவாரியை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

கல்குவாரியை மூடக் கோரி தீபாவளியை புறக்கணிக்கும் மக்கள்

மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்வரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தை கருப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்தப் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கிராம மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:காஞ்சிபுரம் கல்குவாரி குடோனில் வெடிவிபத்து- ஒருவர் மாயம், மற்றொருவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details