தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு போல் மாறும் ஒட்டன்சத்திரம் சந்தை!

திண்டுக்கல்: சென்னை கோயம்பேடு சந்தைபோல் ஒட்டன்சத்திரம் சந்தையும் மாறிவிடுமோ என அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

கோயம்பேடு மார்கெட் போல் மாறும் ஒட்டன்சத்திர மார்கெட்
கோயம்பேடு மார்கெட் போல் மாறும் ஒட்டன்சத்திர மார்கெட்

By

Published : May 13, 2020, 12:51 PM IST

Updated : May 14, 2020, 2:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தற்காலிக மதிய நேர சந்தை பேருந்து நிலையத்தில் இயங்கிவருகிறது. இந்தச் சந்தையிலிருந்துதான் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு காய்கறிகள் தினமும் அனுப்பப்பட்டுவருகின்றன.

தற்போது கோயம்பேடு சந்தையிலிருந்து வந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக இந்தச் சந்தையிலிருந்து சென்னை சென்றுவரும் வியாபாரிகள், ஓட்டுநர்கள் என யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால்கூட இந்த சந்தை முழுவதும் கோயம்பேடு சந்தையைப் போல கரோனா பரவும் இடர் உள்ளது.

இதனைச் சற்றும் உணராத பொதுமக்கள், வியாபாரிகள் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஏலம் விடுவது, காய்கறிகளை வாங்குவது என நோய் குறித்த அச்சமின்றி செயல்படுகின்றனர்.

கோயம்பேடு போல் மாறும் ஒட்டன்சத்திரம் சந்தை

மேலும் நகராட்சி நிர்வாகம் இதனைக் கண்டுகொள்வதில்லை. காவல் துறையினர்கூட கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். கோயம்பேடு சந்தையில்ல் நடந்ததுபோல் இல்லாமல் உடனடியாக இந்தச் சந்தை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து நமது ஈடிவி பாரத் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலும் கரோனோ தடுப்பு நடவடிக்கையாக மூன்று இடங்களில் காய்கறிச் சந்தை பிரித்து நடத்த அனுமதியளிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.

தற்போது ஒட்டன்சத்திரத்தில் கோயம்பேட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'அழாத நான் தூங்கனும்' - 8 மாத குழந்தையைக் கொலைசெய்த தந்தை!

Last Updated : May 14, 2020, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details