தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற தம்பதியை மீட்ட பழனி போலீஸாருக்கு பாராட்டு மழை - dindugal

திண்டுக்கல்: பழனி தனியார் விடுதியில் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த பழனி காவல் துறைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கேரள தம்பதியினர்

By

Published : May 3, 2019, 11:14 PM IST

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனது மனைவி சுஸ்ராஜ் மற்றும் இரண்டு வயது மகன் அர்த்த மௌலி நாத் ஆகியோருடன் பழனி வந்துள்ளார்.

அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய இவர், மலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் கேரளாவில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து தாங்கள் இனி ஊருக்கு திரும்ப மாட்டோம் என்றும், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்து போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற தம்பதியை மீட்ட பழனி காவல் துறையினர்

இதனால் பதறிப்போன உறவினர்கள் கேரளக் காவல் துறையினர் உதவியுடன் பழனி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழனி பகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இறுதியாக அடிவாரம் பகுதியில் உள்ள சரவணா என்னும் தனியார் விடுதியில் அவர்கள் தங்கியிருப்பது கண்டறிந்த காவல் துறையினர், மூவரையும் உயிரோடு மீட்டனர்.

பின்னர், அவர்கள் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடன் விரைந்து செயல்பட்ட பழனி டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details