முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலின் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “வெளி மாநிலத்தவர்கள் மற்றும் திருக்கோயிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் பிரசாதத்தினை பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லும் நடைமுறையினை அறிமுகப்படுத்தும் விதமாக பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பிரசாதமான அரைகிலோ எடை கொண்ட லேமினேட்டட் டின் பஞ்சாமிர்தம், தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்காரப் புகைப்படம், இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட திருநீறு ஆகியவை அனுப்பிவைக்கப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்தவேண்டும்.