திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு வீரகாந்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில், புகார் அளித்த பெண் காவலர் , கீரனூர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.