தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Palani Kumbabishekam:பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்கான 4ஆம் கால யாக பூஜை தொடக்கம் - முருகன் கோவில் கும்பாபிசேகம்

Palani Kumbabishekam:பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான நான்காம் கால யாக பூஜைகள் இன்று தொடங்கியது.

Palani Kumbabishekam:பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்கான 4ஆம் கால யாக பூஜை தொடக்கம்
Palani Kumbabishekam:பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்கான 4ஆம் கால யாக பூஜை தொடக்கம்

By

Published : Jan 25, 2023, 8:07 PM IST

Palani Kumbabishekam:பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்கான 4ஆம் கால யாக பூஜை தொடக்கம்

Palani Kumbabishekam:திண்டுக்கல் அருகே பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் பிரதானமாக விளங்கும் மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகமானது வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பழனி கோயில் மூலவரான நவபாஷாண முருகனுக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 23-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேகம் யாகவேள்வி நிகழ்ச்சியில் நேற்று மாலை வரை மூன்று கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், இன்று(ஜன.25) காலை 11 மணியளவில் நான்காம் காலையாக வேள்விகள் தொடங்கியது. வருகிற ஜனவரி மாதம் 27-ம் தேதி அதிகாலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் 26-ம் தேதி மலைக்கோயில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோயிலுக்கு 26-ம் தேதியான நாளை காலை 9.50 முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இதையடுத்து 27-ம் தேதி நாளை மறுநாள் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, தங்க ரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேகம் விழாவையொட்டி வருகிற 27-ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நாள் முழுவதும் வருகிற 27-ம் தேதி வரை அன்னதானம் நடைபெற துவங்கப்பட்டுள்ளது‌. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்புக் கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ABOUT THE AUTHOR

...view details