தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை விவகாரம் - பணம் கேட்டு மிரட்டியதாக லாட்ஜ் உரிமையாளர் தகவல் - பழனி லாட்ஜ் உரிமையாளர் முத்து

கேரள பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் உண்மையில்லை என பழனி தனியார் லாட்ஜின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

லாட்ஜ் உரிமையாளர் முத்து
லாட்ஜ் உரிமையாளர் முத்து

By

Published : Jul 14, 2021, 7:31 AM IST

திண்டுக்கல்: கேரளாவை சேர்ந்த இருவர், ஜூன் மாதம் 19ஆம் தேதி அம்மா, மகன் என கூறிக்கொண்டு பழனி அடிவாரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், இருவரும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் லாட்ஜ் உரிமையாளர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்.

அதன் பின்னர் இருபது நாட்களுக்குப் பிறகு கேரளாவிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு காவல்துறையினருக்கு அப்பெண்ணுடன் வந்த தங்கராஜ் என்பவர், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

அதன் பேரில் தீவிர விசாரணையில் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையிலான காவல்துறையினர், லாட்ஜ் உரிமையாளர், பணியாளர்கள் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரிடம் விசாரணை செய்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்த விவகாரம் தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் முத்து, அம்மா, மகன் என்ற பெயரில் இருவர் வந்து, அங்கு அறை எடுத்து தங்கியதாகவும், மது போதையில் தகராறு செய்ததால் அவர்களை அறையைவிட்டு வெளியேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

லாட்ஜ் உரிமையாளர் முத்து செய்தியாளர் சந்திப்பு

மேலும் கேரள போலீஸ் என கூறிக்கொண்டு செல்போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவர், தங்கள் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டும் வகையில் பேசியதாகவும் தங்கும் விடுதி உரிமையாளர் கூறியுள்ளார்.

பொய் புகாரா...?

காவல்துறை விசாரணையில் கேரளாவிலிருந்து வந்த இருவரும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பாலியல் வன்கொடுமை என கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதால் அவர்கள் வாட்ஸ் அப் மூலம் அளித்தது பொய் புகார் என கூறப்படுகிறது. கேரளா பெண்ணின் குற்றச்சாட்டிற்கு லாட்ஜ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சம்பவமே நடைபெறவில்லை: பழனி பாலியல் வன்முறை விவகாரத்தில் புதிய திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details