தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நடை அடைப்பு - அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மதியம் 2.30 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நடை அடைப்பு

By

Published : Nov 5, 2022, 4:13 PM IST

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலைக்கோவிலில் வருகின்ற 8ம் தேதியன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி, பரணி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் மாலை 5.47 மணிக்கு தொடங்கி 6.26 மணிக்கு முடிவடைகிறது.

அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும் எனவும் அன்று காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சந்திர கிரகணம் முடிவுற்றதும் மாலை 7 மணிக்கு மேல் சம்ப்ரோசன பூஜை நடைபெற்ற பின் சாயரட்ஜை பூஜையும் தொடர்ந்து தங்கரத புறப்பாடு அதன் பின்னர் ராக்கால பூஜையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 4 மாவட்ட கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details