திண்டுக்கல் மாநகரைச் சுற்றியுள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தோல் தொழிற்சாலை கழிவுநீர் ஆகியவை பாறைப்பட்டி அருகே உள்ள கழிவு நீரேற்று நிலையத்திற்குக் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையைக் கடக்கிறது.
குழாய் உடைப்பால் கழிவுநீர் வெளியேற்றம்; வாகன ஓட்டிகள் அவதி! - drainage water
திண்டுக்கல்: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 அடி உயரத்திற்கு நீரூற்று போலக் கழிவுநீர் வெளியேறி வருகிறது .
இந்நிலையில், அங்குள்ள இரண்டு குழாய்களில் ஒரு குழாயில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சுமார் 15 அடிக்கு நீர் ஊற்று போலத் தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகிறது.
இதனால், ஏற்படும் துர்நாற்றம் காரணமாகவும் சாரல் காரணமாகவும் நான்கு வழிச் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர். குழாய் உடைப்பை உடனடியாக அலுவலர்கள் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.