தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kodaikanal: பூத்துக்குலுங்கும் கண்கவர் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்! - திண்டுக்கல் செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வருடத்திற்கு 1 முறை மட்டும் பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகிறது

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர்கள்
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர்கள்

By

Published : Jan 13, 2023, 11:10 AM IST

Updated : Jan 13, 2023, 11:59 AM IST

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் தற்போது உறைபனிக் காலம் துவங்கி கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக ஆர்னமென்டல் செர்ரி மலர் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் இளம்சிவப்பு வண்ணத்தில் பூத்துக்குலுங்குகிறது.

இந்த பூவானது மரத்தில் பூக்கக்கூடிய அரிய வகை பூவாகும். ஆண்டு முழுவதும் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரம், டிசம்பர் மாதம் மலர் மொட்டுக்கள் உருவாகி மரத்தின் அனைத்து இலைகளையும் உதிரத் துவங்குகிறது. பின்னர் ஜனவரி மாதம் துவங்கியதும் அனைத்து மொட்டுக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து மரம் முழுவதும் இளம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கிறது.

இந்த மரத்தில் உள்ள ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது பூங்காவில் வேறு மலர்கள் இல்லாத நிலையில் செர்ரி மலர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

Last Updated : Jan 13, 2023, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details