திண்டுக்கல்: அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் நேற்று (பிப்.10) திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வேட்பாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுகவைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம் ஒரு முக்கியப்பங்கு வகித்துள்ளது. அதிமுகவிற்கு அச்சாரமாக விளங்கியது திண்டுக்கல். அதிமுக ஆட்சி மக்களாட்சியாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நூறு விழுக்காடு நிறைவேற்றியது.
மக்கள் குறித்து கவலை இல்லா திமுக
தாலிக்குத் தங்கம் திட்டத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியது ஜெயலலிதா தான். திருமண உதவித்தொகையை ரூ. 12 ஆயிரத்தில் இருந்து, ரூ. 18 ஆயிரமாக உயர்த்தியது எடப்பாடி பழனிசாமிஅரசு.