தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் சந்தையில் விலை உயர்ந்துள்ள கால்நடைகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடைகள் விலை உயர்ந்துள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By

Published : Jan 13, 2020, 10:51 PM IST

market
market

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாமல் குறைந்த விலைக்கு விற்றுவந்தனர்.

தற்போது பெய்த தொடர்மழை காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனங்களும், பச்சை பில் போன்றவை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக கால்நடைகளை விலைக்கு வாங்குகின்றனர்.

அதன்படி, இன்று நடைபெற்ற சந்தையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி, பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பனூத்து, அப்பிய பாளையம், தாமரைக்குளம், தாசநாயக்கன்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் கால்நடை மருத்துவ உதவி இயக்குனர்கள் டாக்டர் மணிவாசகன், சுரேஷ் தலைமையில் 200 கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் வாரச்சந்தை

அதேபோல் பயனாளிகளுக்கு போக்குவரத்து செலவாக ஒவ்வொரு கறவை பால் மாடுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதனால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள், இன்று விலை உயர்ந்து ரூ.35 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது.

நாட்டு பசு மாடுகள் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - களைகட்டிய சமத்துவ பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details