திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் பயணியர் நிழற்குடை மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழரசன் மற்றும் வாகரையைச் சேர்ந்த கனிஸ்வரன், ராகுல் ஆகியோர் மார்க்கம்பட்டி அருகே உள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடிந்து ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது வழியில், புளியம்பட்டி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த பயணியர் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளானதில் தொப்பம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.