தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் கருத்தில்லை - வேலூர் இப்ராஹிம் - வேலூர் இப்ராஹிம்

நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து கட்சியினுடைய கருத்து இல்லை எனவும்; அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சிறுபான்மையினர் தேசியச்செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வேலூர் இப்ராஹிம், Vellore Ibrahim
வேலூர் இப்ராஹிம்

By

Published : Jan 26, 2022, 8:32 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய சிறுபான்மையினர் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என நம்புகிறோம்.

அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து கட்சியினுடைய கருத்து இல்லை. அது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கினாலும் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்வதால் இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்கிறது" என்றார்.

வேலூர் இப்ராஹிம் பேட்டி

இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தேன்' - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details