தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் கண்ணாடி உடைப்பு... மாஜி அமைச்சர் கண்முன்னே வேட்பாளரை கடத்திய கும்பல்! - Crime report

கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரை அதிமுக முன்னாள் அமைச்சரின் கண்முன்னே கடத்திச்சென்ற அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. வேட்பாளரை கடத்திய மர்ம கும்பல்!
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. வேட்பாளரை கடத்திய மர்ம கும்பல்!

By

Published : Dec 19, 2022, 3:32 PM IST

கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவரை அதிமுக முன்னாள் அமைச்சரின் கண்முன்னே கடத்திச் சென்ற மர்ம கும்பல்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். நாகம்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே நான்குக்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முன்னாள் அமைச்சரின் வாகனத்தை மறித்துள்ளனர்.

தொடர்ந்து கார் கண்ணாடியை உடைத்த அந்த கும்பல், முன்னாள் அமைச்சர் உடன் வந்த கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிக என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். அதேநேரம் இன்று (டிச.19) மதியம் 2 மணிக்குள் கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் முடிவடைவதால், வேட்பாளரை கடத்தியதாகத் தெரிகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான காவல் துறையினர், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Video: நடிகர் செந்தில் எண்ணையினை கடத்துவது போல்... மதுபான பாட்டில் கடத்திய மதுப்பிரியர்

ABOUT THE AUTHOR

...view details