தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பெண் பக்தர்கள் போதையில் சாமி ஆட்டம்" - பழனி கோயில் உதவி ஆணையர் மீது வலுக்கும் புகார்! - பழனி கோயில் விவகாரம்

Palani Murugan Temple Issue: பழனி கோயிலில் நாதஸ்வரம் இசைக் கருவிகள் இசைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாதஸ்வர கலைஞர்கள் முருகன் பாடலை இசைத்து நன்றி தெரிவித்தனர்.

இசைக் கருவிகளை இசைத்து நன்றி தெரிவித்த இசைக் கலைஞர்கள்
இசைக் கருவிகளை இசைத்து நன்றி தெரிவித்த இசைக் கலைஞர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:01 PM IST

Updated : Jan 8, 2024, 7:11 PM IST

இசைக் கருவிகளை இசைத்து நன்றி தெரிவித்த இசைக் கலைஞர்கள்

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விஷேச காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து, பழனி மலை முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், தைப்பூச திருவிழா வரும் ஜன.19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இத்திருவிழாவையொட்டி தற்போதில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த ஐந்தாம் தேதி கரூர் மாவட்டம் தோகை மலையை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள் எடுத்துக்கொண்டு மேளங்கள் மற்றும் நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்தப்படி கிரிவல படிப்பாதையில் சென்ற போது, கோயில் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

நாதஸ்வர தவில்கள் இசைத்து மலைக்கோயிலுக்கு செல்ல தடை விதித்திருப்பதாக கூறினர். 48 வருட காலமாக இசைக்கருவிகளை வாசித்து வந்து கொண்டிருக்கும் எங்களுக்கு, புதிதாக நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறுவது சரியானது இல்லை என்று கூறி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நாதஸ்வர கலைஞர்கள் கோயில் உதவி ஆணையர் லட்சுமியிடம் கேட்க சென்ற போது, நீங்கள் இசைப்பது இசை போல இல்லை என்றும் நீங்கள் வாசிப்பதைக் கேட்டு, முருகனே எழுந்து ஓடி விடுவான் போல இருக்கிறது என்றும், பெண் அருள் வந்து ஆடுவதை தண்ணியை போட்டு ஆடுவதாகவும், உங்களுடைய சான்றிதழை கொடுங்கள் ரத்து செய்கிறேன் என்றும் அவமரியாதையாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது.

இந்த கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பழனி மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசை கருவிகள் மங்கள இசை உடன் மட்டும் வாசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இன்று (ஜன.8) இந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் தலைமையில் வந்திருந்த நாதஸ்வர கலைஞர்கள் கோயில் தலைமை அலுவலகம் முன்பாக முருகன் பாடலை இசைத்து கோயில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய ராம ரவிக்குமார், “கோயில் நிர்வாகம் மங்கள இசை நாதஸ்வர இசைக்க அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீண்டும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது குறித்து கேட்கச் சென்ற நாதஸ்வர கலைஞர்களை உதவி ஆணையர் லட்சுமி பேசியது கண்டிக்கத்தக்கது. பக்தர்களை குடித்து விட்டு ஆடுகிறார்கள் என்று கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்தும் வகையில் அவரை பணி மாறுதல் செய்ய வேண்டும்.

ஏற்கனவே சேவல் ஏலம் விடுவது தொடர்பான பிரச்சினை வந்த போது ஏய் நீங்கள் பைத்தியமானு கேட்டார்கள். தற்போது பெண்கள் தண்ணியை போட்டு ஆடுவதாக கூறுகிறார்கள். பெண் முருக பக்தர்களை கேவலமாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி ஆணையர் லட்சுமி பக்தர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படும் எனில், அதை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். பழனி கோயில் அலுவலகத்தில் நாதஸ்வர கலைஞர்கள் திடீரென முருகன் பாடலை இசைத்து நன்றி தெரிவிக்க குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.. விடுமுறை தினத்தால் குவிந்த பக்தர்கள்!

Last Updated : Jan 8, 2024, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details