திண்டுக்கல்: ஈரோடு மாவட்டம் அத்தன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண(75). விவசாயியான இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது தனது முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை கயிற்றால் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது, உலகெங்கும் கரோனா அச்சுறுத்தலால் மக்கள் அல்லல்படுவதில் இருந்து விடுபட்டு உலக மக்கள் நலன் வேண்டி இந்த நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என்றார்.