தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம் - எம்பி ரவீந்திரநாத்

மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக பழநியில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 6, 2022, 10:28 AM IST

திண்டுக்கல்:பழநி மலைக்கோயிலில் அதிமுகவைச் சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் தங்கரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என கூறினார். வரப்போகும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம் - எம்பி ரவீந்திரநாத்

சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக பொதுக்குழு தொடர்பன மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது; ஒருங்கிணைப்பாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்குவார்...ஆம் ஆத்மி வசீகரன்

ABOUT THE AUTHOR

...view details