திண்டுக்கலில் இருந்து பழனி செல்லும் சாலையில் மருத்துவமனைகள், பாத்திரக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருவதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பயன்படுத்துவதற்காக, கிரேன் மூலம் கண்டெய்னர் கேபின் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், சாலையின் இருபுறமும் வாகனம் செல்ல வழியில்லாமல் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்தனர்.
கிரேன் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி - திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்: பழனி சாலையில் கிரேன் மூலம் கண்டெய்னர் எடுத்துச் சென்றதால் சாலையில் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், பொதுமக்கள் அதிகள் பயன்படுத்தக்கூடிய திண்டுக்கல்-பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீண்ட வரிசையில் சாலைகளில் தங்களது வாகனங்களுடன் காத்திருந்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற பணிகளை மக்கள் நடமாட்டமில்லாத இரவு வேளைகளில் செய்யாமல் பகலில் செய்வதால் மக்களின் நேரம் விரையமாகிறது. மேலும் அரசு, தனியார் மருத்துவமனை அதிகமுள்ள பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவசர ஊரதி சென்று வருவதற்கு கூட பெரும் சிரமம் ஏற்பட்டது.