தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது என்பதை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தப்படும் - கள் இயக்க நல்லசாமி - ஆனைமலை நல்லாறு திட்டம்

கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது என வலியுறுத்தி வருகிற ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 8, 2023, 5:48 PM IST

'கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது என்பதை வலியுறுத்தி அறப் போராட்டம் நடத்தப்படும்'

திண்டுக்கல்: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூறியதாவது, ''அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறாக 1987ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கள்ளில் உள்ள கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தடை செய்வதற்கு காரணமாக கூறினார்கள். தெலங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கள்ளில் உள்ள கலப்படத்தை கட்டுப்படுத்துகிறார்கள். அப்படி பார்த்தால் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும், பருகுவதும். எனவே, கள்ளுக்கு அனுமதி கேட்பது, கள்ளுக்கடையைத் திறக்க கோருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது கள் பற்றிய புரிதல் இன்மையின் வெளிப்பாடாகும். நாங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, கள் இறக்கி சந்தைப் படுத்துவோம்.

எனவே, கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது என வலியுறுத்தி வருகிற ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப் போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் பனை, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22ஆம் தேதி பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமாயில் இறக்குமதியை குறைத்து உள்ளூர் எண்ணெய் சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. கேரளாவில் கள் இறக்கி விற்பனை செய்ய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

குறிப்பாக 'கேரள கள்' என்ற பெயரில் விற்கவும், கள்ளுவில் இருந்து வினிகர் தயாரிப்பு, மதிப்பு கூட்டுப் பொருட்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் மது கொள்கை, மதுவிலக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

காவிரியில் தினந்தோறும் நீர்ப் பங்கீடு என்ற முறை இருந்தால் தமிழ்நாட்டுக்குத் தேவையான நீரைப் பெறுவதில் சிக்கல் இருந்திருக்காது. தமிழ்நாட்டில் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'ஜெயிலர்' சினிமா பார்க்க கூடுதல் டிக்கெட் கேட்டு தியேட்டர் மேலாளரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details