திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த இடங்களில் நேற்று (பிப்ரவரி 22) அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், திண்டுக்கல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். மக்கள் ஆதரவு திமுகவுக்கு அதிக அளவு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
நல்லாட்சியால் திமுக வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இதனால் அனைத்து பேரூராட்சிகளையும், நகராட்சிகளைும் மாநகராட்சிகளையும் நாங்கள் பிடித்துள்ளோம். பல இடங்களில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலைவுள்ளது. அங்கு திமுக அரசு அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சேவைகள் செய்யும்.
மேலும், மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி செயல்படும் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்துவார்.” என்றார். அமைச்சருடன், அவைத் தலைவர் பஷீர் அஹ்மது, நகரச் செயலாளர் ராஜப்பா, ஒன்றியச் செயலர் செழியன், துணைத் தலைவர் நாகராஜ் உட்பட பலர் இருந்தனர்.
இதையும் படிங்க : திமுக கூட்டணி அமோக வெற்றி! தொண்டர்கள் கொண்டாட்டம்