தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV: குறுக்கே வந்த மாடு: விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு - dindigul

நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் மீது குறுக்கே வந்த மாடு மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாடு மீது மோதிய மெக்கானிக் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
மாடு மீது மோதிய மெக்கானிக் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

By

Published : Jul 26, 2022, 10:07 PM IST

திண்டுக்கல்: நத்தம் ராக்காச்சிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (42). இவர் நத்தம் மின்சார வாரிய அலுவலகம் முன்பாக மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி உட்பட ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, அவரும் அவரது உறவினர் மாணிக்கம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராக்காச்சிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

காந்திஜி கலையரங்கம் முன்பாக வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தின் மீது குறுக்கே வந்த மாடு மோதியதால், இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிசிடிவி

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல இருந்த அழகர்சாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Video:கர்நாடகாவில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த கார் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details