திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிறப்பு அதிரடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நவீன் பிரசாத் என்ற மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாவோயிஸ்ட் ஆயுதப் பயிற்சி தொடர்பான வழக்கு - 6 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்!
திண்டுக்கல்: ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், காளிதாஸ், லீமாரோஸ் மேரி, செண்பகவல்லி உட்பட 7 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இவ்வழக்கு இன்று (18.11.19) முதல் வருகின்ற 3ஆம் தேதி வரை நாள்தோறும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட நவீன் பிரசாத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் முப்பத்தொரு தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மாவோயிஸ்டுகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு நீதிமன்றம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ''திமுகவினரின் சட்டையை கிழிங்க, வீட்டு கதவை உடைங்க" - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!