கன்னிவாடியில் அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் அம்சராஜ். இவருடைய தந்தை கன்னிவாடியின் ஜமீன்தார் ஆவார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் அம்ச ராஜ் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் எஸ்தர் என்பவருடைய ஆறு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது .
6 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை - posco act
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடியில் ஆறு வயது சிறுமிக்கு, 58 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
arrest
இதனை அடுத்து சிறுமி அலறியதை அடுத்து பக்கத்திலிருந்தோரும், சிறுமியின் தாய் எஸ்தரும் அம்சராஜை கையும் களவுமாகப் பிடித்து சிறுமியை மீட்டனர். பின்னர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியின் தாய் எஸ்தர் புகார் கொடுத்ததை அடுத்து, உடனடியாக அம்சராஜை மகளிர் காவல்துறையினர் கைது செய்து, போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.